search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரு மாதம்"

    • குமரி மாவட்டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது.
    • மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப் படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப் படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவ காலமாக உள்ளது.

    குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியில் ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய் பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விசைப் படகு ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர்.

    இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் கடந்த மே மாதம் 31-ந்தேதி நள்ளிரவு முதல் தடைக்காலம் தொடங்கியது. இதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூ ரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த மீன்பிடி தடைக்கா லத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளை பழுது பார்த்து வருகின்றனர். மீனவர்கள் வலைகளை பின்னும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்து வருகின்றனர்.

    குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகு களுக்கு மீன்பிடி தடைக் காலம் நீங்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் விசைப்படகினர் தங்கள் விசைப்படகுகளை தீவிர மாக பழுது பார்த்து வருகின்றனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட சாலைப்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு க்கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர், துறைசார்ந்த அலுவலர்க ளுடன் ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் சென்ற மாதம் விபத்து களினால் உயிரிழப்பு ஏற்பட்ட பகுதிகளில் விபத்து கள் ஏற்படா வண்ணம் மேற் கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்தும், தற்போது விபத்து ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப் பட்டது.

    நாகர்கோவில் மாநகராட்சி யில் நெருக்கடி பகுதிகளான வடசேரி, கார்மல் மேல்நிலைப் பள்ளி எதிர்புறம், புன்னைநகர், பால்பண்ணை சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கு மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், போக்குவரத்துத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட குழுவினர் இட ஆய்வு செய்து, பணிகளை முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை பலகைகள், வேகத்தடை அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதிவேகமாக இருசக்கர வாகனங்கள் போட்டி ப்போட்டு ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அபராதம் விதிக்க போலீ சாருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீர் செய்திட நெடுஞ் சாலைத்து றைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, முக்கியமான சாலைகளில் தெருவிளக்குகள் இல்லாத காரணத்தினால் விபத்துகள் ஏற்படுவதை கருத்தி ல்கொண்டு, அந்தந்த பகுதி நகராட்சி ஆணை யாளர்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலை யோரங்களி லுள்ள மரங்களில் ஒளிரும் வண்ண பூச்சுகள் மேற்கொள்ளுமாறும், சாலையோரங்களி லுள்ள மரங்களின் கிளைகள், மின்விளக்கு கள் மற்றும் மின்தடத்தில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அப்புறப் படுத்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு சென்ற மாதம் 8141 நபர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிவதோடு, நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட்பெல்ட் போட்டு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வுக்கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை –நிலமெடுப்பு) ரேவதி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுரா மலிங்கம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சுப்பையா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிர மணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • அமராவதி ஆறு அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளை ஆதாரமாக கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது.

    அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக அமராவதி நிரம்பியது. சூழ்நிலைக்கு ஏற்ப உபரிநீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அணை அதன் முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீர் வரத்து அதிகரித்தால் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக கூடுதலாக உபரி நீர் திறப்பதற்கு உண்டான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை வைத்தால் அதன் பெயரில் கருத்துரு தயாரித்து அனுப்பப்பட்டு தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றைய நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.46 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 676 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 483 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    ×